நடிகர் சிரஞ்சிவி சார்ஜா மறைவுக்கு குஷ்பு, ராஷ்மிகா அஞ்சலி..

ன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நேற்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. இவர் நடிகர் அர்ஜுன் தம்பி. மேலும் காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மேக்னாராஜின் கணவரும் ஆவார். சிரஞ்சீவி சார்ஜா, மேக்னா ராஜுக்கு கடந்த ஒன்றறை வருடத்துக்கு முன்தான் திருமணம் நடந்தது.


சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்திருக்கின் றனர்.
நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள மெசேஜில்,’நம்பவே முடியவில்லை. சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பில் மரணம் என்ற தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன். இளம் கன்னட நடி.கர் அர்ஜூனின் உறவினர். திறமையானவர். நல்ல இதயம் படைத்தவர். அவரது இளம் மனைவியின் நிலையை எண்ணி வருந்து கிறேன். சிரஞ்சீவி சார்ஜா ஆன்மா சாந்தி அடையட்டும்.

நடிகை ராஷ்மிகா:என் இதயம் உடைந்து விட்டது.. உண்மையில் இந்த செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. இந்த முடிவு அவருக்கு ரொம்பவே சீக்கிரமாக வந்திருப்பது சோகமானது, என்னால் வருத்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.


நிக்கி கல்ராணி: சிரஞ்சீவி சார்ஜா மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. ரொம்பவும் கலகலப்பாகவும் பாசிடிவ் எண்ணத் துடனும் பழக்கக்கூடியவர். ரொம்ப சீக்கிரேமே மறைந்துவிட்டார். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்.
நடிகர் பிரித்விராஜ்: சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. மேனாவுக்காகவுக்குகும் அவர்களது குடும்பத்துக்கும் இந்த இழப்பை தாங்கும் வலிமை தர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,
இவ்வாறு பலரும் தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர்.