கர்ப்பிணி மனைவிக்கு சிரஞ்சீவி கடைசியாக கொடுத்த காதல் பரிசு…..!

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மருமகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39.

சிரஞ்சீவியின் மனைவியான நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.சிரஞ்சீவி சார்ஜா மேக்னாவுக்கு குழந்தை பொம்மை ஒன்றை பரிசளித்துள்ளார். கடந்த 7ம் தேதி மேக்னா அந்த பொம்மையையும் எடுத்து ஹாஸ்பிடல் வந்துள்ளார்

தற்போது அந்த பரிசை பற்றி சிரஞ்சீவி மற்றும் மேக்னா ஆகியோரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.