சிரஞ்சீவி நடித்த ’’சூப்பர் ஹிட்’’ சினிமாக்கள் ‘’ரீமேக்’’ செய்யப்பட்டால் கதாநாயகன் யார்?

சிரஞ்சீவி நடித்த ’’சூப்பர் ஹிட்’’ சினிமாக்கள் ‘’ரீமேக்’’ செய்யப்பட்டால் கதாநாயகன் யார்?

அவரே வெளியிட்ட ருசிகர தகவல்..

நடிகை சமந்தா ’’ஆகா’’ என்ற ஓ.டி.டி. தளத்தில் ‘சாம்ஜம்’’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சிரஞ்சீவியிடம் ‘’ நீங்கள் நடித்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் இப்போது ’ரீமேக்’ செய்யப்பட்டால் ,அதில் யார் கதாநாயகனாக நடித்தால் பொருத்தமாக இருக்கும்?’ என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

சிரஞ்சீவி வரிசைப்படுத்திய நடிகர்கள் பட்டியல் இது:

இந்திரா- பிரபாஸ்

சேலஞ்ச்- அல்லு அரவிந்த்

ரவுடி அல்லுடு- விஜய தேவரகொண்டா

கேங் லீடர்- ரவிதேஜா

ஜெகதிவீரு ஆதிலோக சுந்தரி- மகேஷ் பாபு

 மேற்கண்டவாறு தெரிவித்த சிரஞ்சீவி , தனது ஒரே ஒரு படத்தை  மட்டும் தனது தம்பி பவன் கல்யாண் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அது எந்தப்படம்?

2013 ஆம் ஆண்டு வெளிவந்த –தாகூர்

சிரஞ்சீவி  நடித்த சினிமாக்களில் பெரும் வசூல் குவித்த படங்களில் ஒன்று, தாகூர்.

இந்த படத்தை வி.வி.விநாயக இயக்கி இருந்தார்.

’தாகூர்’ விஜயகாந்த் நடித்து தமிழில் வெளியான ‘ரமணா’’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.