சிரஞ்சீவி சார்ஜா கடைசி இன்ஸ்டகிராம் பதிவு..

--

டிகர் அர்ஜுனின் சகோதார் மற்றும் நடிகை மேக்னாராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா. கன்னட பட நடிகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தார். 39 வயதிலேயே திடீர் மாரடைப்பில் இறந்த அவரது கடைசி இன்ஸ்டகிராம் பதிவு பற்றி அவரது சகோதரர் சூரஜ் சார்ஜா வெளியிட் டிருக்கிறார்.

அதில் சிறு வயதில் சிரஞ்சீவி சார்ஜா, துருவா சார்ஜா, சூரஜ் சார்ஜா ஆகியோர் ஒன்றாக கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து. ’அப்போதும் இப்போதும் நாங்கள் ஒன்றுபோல்தான் இருக்கிறோம்..’ என குறிப்பிட்டிருக்கிறார் சிரஞ்சீவி சார்ஜா.
படத்துடன் இந்த பதிவை வெளியிட்ட சூரஜ், ’இன்னும் கூட எங்களால் ஜீரணிக்க முடியவில்லை, இதுதான் சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி பதிவாக இருக்கும் என்பதை.. உங்களை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம்.. விவரிக்க வார்த்தைகள் இல்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.