மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி..

மோகன்லால் வேடத்தில்   சிரஞ்சீவி..


நடிகர் பிரித்விராஜ், திரைப்பட இயக்குநராக அறிமுகமான படம்- லூசிபர்,மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார்.

விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மோகன்லால் பின்னி எடுத்திருப்பார்.

மலையாள சூப்பர் ஸ்டார் என்றாலும் சிறு தொய்வுக்குப் பிறகு மோகன்லாலுக்கு இந்த படம் ‘ரீ-எண்ட்ரி’ என அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

அரசியல்  மாற்றத்தைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகி இருந்த ’’லூசிபர்’ 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு, நல்ல வசூல் பார்த்தது.

இந்த படத்தைத் தெலுங்கில் தயாரிக்கும் உரிமையை நடிகர் சிரஞ்சீவி ஏற்கனவே வாங்கி இருந்தார்.

நடிகர் முடிவாகாமல் இருந்தது.

இப்போது ‘லூசிபர்’ -தெலுங்கு ரீ.மேக்கில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவியே நடிக்க உள்ளதாகத் தகவல்.

’சாஹோ’’புகழ் சுஜீத், இந்த படத்தை இயக்க உள்ளார். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் ,ஷுட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது.

– ஏழுமலை வெங்கடேசன்