ஜனவரி 27-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு சன் டிவியில் ‘சித்தி 2’…!

சீரியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதில் ‘சித்தி’ சீரியலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

சி.ஜெ.பாஸ்கர் இயக்கிய இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்தார். அவருடன் சேர்ந்து சிவகுமார், தீபா வெங்கட், சுபலேக சுதாகர், யுவராணி, விஜய் ஆதிராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த சீரியல், 2001-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி தனது இறுதி எபிசோடை நிறைவு செய்தது. மொத்தம் 467 எபிசோடுகள் ஒளிபரப்பாயின.

சீரியல் மட்டுமில்லை அதன் டைட்டில் சங்கும் மக்களை வெகுவாக கவர்ந்தது . டைட்டிலைப் போடும்போது ‘சித்தி’ என்ற குழந்தையின் குரலும், ‘கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா’ என்ற டைட்டில் பாடலும் அனைவரையும் டிவியின் முன் கட்டி போட்டு வைத்தது .

வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, எஸ்.பி.பி. மற்றும் நித்யஸ்ரீ மஹாதேவன் இருவரும் பாடினர். தினா இசையமைத்தார்.

இந்நிலையில், ‘சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகம் வருகிற 27-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று இதன் ப்ரமோ, நேற்று வெளியிடப்பட்டது.