சீயான் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ டீசர் வெளியானது…

டிகர் விக்ரம் நடிக்கும் படமான கடாரம் கொண்டான் அவரின் 56வது படம்.. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.

படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தில் நடிகர் விக்ரம் கடத்தல்காரராக நடித்திருக்கிறார். இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.