சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"கபாலி" காட்சியில் ரஜினியுடன், சோ
“கபாலி” காட்சியில் ரஜினியுடன், சோ

அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நடிகர் என்று பன்முகம் கொண்ட  சோ.ராமசாமி. வயோதிகம் காரணமாக அவ்வப்போது உடல் நல பாதிப்புக்குள்ளாகிவருகிறார்.  சமீபத்தில், மூச்சு திணறல் காரணமாக, மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று  நலமுடன் மீண்டார்.  ரஜனி நடித்து வெளியாகியிருக்கும் கபாலி திரைப்பட சிறப்புக் காட்சிக்கும் வந்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இன்று  மாலை  தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.