பாஜகவினரை ‘குரங்குகள்’ என சித்தரித்து 1990ம் ஆண்டே தனது துக்ளக் பத்திரிகையின் அட்டை படமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார் அதன் ஆசிரியர் மறைந்த சோ.

தற்போது அந்த  இதழின் அட்டைப்பட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…. நெட்டிசன்கள் பாஜகவினரை கலாய்த்து  மரண மாஸ் கொடுத்து வருகின்றனர்….

மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ, பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவர்களின் மக்கள் விரோத அரசியல் நடவடிக்கைகளையும்  கடுமையாக விமர்சித்து வந்தார்.

சோ மறைவுக்கு பிறகு, துக்ளக் பத்திரிகை ஆசிரியராக ஆடிட்டர் குருமூர்த்தி இருந்து தொடர்ந்து பத்திரிகையை நடத்தி வருகிறார். இவர் பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருப்பதால், பாஜக மற்றும் அதன் தொண்டர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரித்தே கருத்து தெரிவித்து வருகிறார்…

இந்த நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) நடைபெற்ற துக்ளக் பொன் விழா நிகழ்வின்போது, வெளி யிடப்பட்ட பொன்விழா மலரில் இடம்பெற்றுள்ள 15/05/1990ம் ஆண்டு துக்ளக் இதழின் அட்டைப்படம்  தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த அட்டைப்படத்தில், பாஜகவினரை, குரங்குகளாக சித்தரித்து சோ வெளியிட்டுள்ள கருத்துப்படமான  ராமர், சீதை, லட்சுமணன், அனுமான் உள்ள படத்தில், ராமன் சீதையை பார்த்து,  அனுமனே! மற்ற வானரங்கள் எங்கே என்று கேட்பது போலவும், அதற்கு அனுமன் (குரங்கு) அவைகளெல்லாம் இந்தியாவில் அரசியல் தலைவர்களாக உங்களுக்கு கோவில் கட்ட வேண்டும், கட்டக்கூடாது என இரு கோஷ்டிகளாக பிரிந்து, உங்கள் பெயரில் கூத்தடித்துக்கொண்டிக்கின்ற பிரபோ! என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த துக்ளக் அட்டைப்படத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்…  பாரதிய ஜனதா கட்சிமைய கடுமையாக விமர்சித்து வருகின்றனர்…

பாரதிய ஜனதா கட்சி குறித்தும், அதன் தொண்டர்கள் குறித்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பே துக்ளக் சோ சரியாக கணித்து வைத்துள்ளார் என்றும் கருத்துக்களை பதிவிட்டு பாஜகவை தெறிக்கவிட்டு வருகின்றனர்,…

சோ ஒரு தீர்க்கதரிசி என்றும்  பாஜகவினர் குரங்குகள் என்பதே அவருக்கு அன்றே தெரிந்துள்ளது என்றும் கருத்துக்களை பதிவிட்டு பாஜகவை கடுமையாக ஓட்டி வருகின்றனர்….