சோ -வின் இறுதிப் பயணம் தொடங்கியது..!

38b92c57-fd18-49a0-b053-8f73bbf97ebeநகைச்சுவை நடிகர், பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர் சோ ராமசாமி அவர்கள் இவரின் துக்ளக் பத்திரிக்கைக்கு என தனி வாசகர் கூட்டமே உள்ளது குறிப்பாக அவரின் கேள்வி-பதில் பகுதியை அனைவரும் விரும்புவார்கள்.

சில நாட்களுக்கு முன் அப்பல்லோ ஆஸ்பித்திரியில் இருக்கும் போது கூட வாசகரின் கேள்வி-பதில் பகுதியை அவரே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிர் இழந்தார். அவரின் இழப்பை பிரதமர் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையில் அனைவரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். தற்போது அவரின் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.