காவலாளி அரசு விண்வெளியிலும் துல்லிய தாக்குதலை நடத்தி உள்ளது: உ.பி.யில் மோடி பிரசாரம்

மீரட்:

நாடாளுமன்ற தேரதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று உ.பி. மாநிலத்தில் பிரசாரம் செய்து வரும் மோடி,  உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார்.

அப்போது, காவலாளி அரசு விண்வெளியிலும் துல்லிய தாக்குதலை நடத்தி உள்ளது என்று மக்களிடையே பேசி வாக்கு சேகரித்தார்.

இன்று தாம் பெற்றிருக்கும் அனைத்துமே நாட்டு மக்கள் தந்தது  என்று கூறியவர், தமக்கு என்று இங்கு எதுவும் இல்லை என்றார்.  ஆனால் எதிர்க்கட்சியினர் தமது குடும்பத்தை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுவதாக கூறிய மோடி, தற்போது நடைபெறும் தேர்தல் நாட்டின் காவலாளிக்கும், ஊழல்வாதிகளுக்கும் இடையிலானது என்று கூறினார்.

செயற்கை கோளை ஏவுகணையால் தாக்கி அழிக்கும் திட்டத்தை கூட காங்கிரஸ் அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்று குற்றம் சாட்டியவர், அந்த திட்டத்தை பாஜக அரசு உடனடியாக நிறைவேற்றியது என்று கூறினார்.

நாட்டின் காவலாளியான தமது அரசு தான் விண்ணிலும், மண்ணிலும் மட்டுமின்றி விண்வெளியிலும் துல்லிய தாக்குதலை நடத்தி உள்ளது என்றவர், ஆனால் எதிர்க்கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதாரத்தை கேட்டு, ராணுவத்தின் தியாகத்தையே சந்தேகிப்பதாக அவர் புகார் கூறினார்.

விண்வெளி தாக்குதலுக்கும், நாடகத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களின் அறிவை எண்ணி அழுவதா, சிரிப்பதா என  பேசியவர், . நாங்கள் வளர்ச்சிகான பாதையில் செல்கிறோம். ஆனால், மற்றவர்களிடம் அதற்கான கொள்கை எதுவும் இல்லை.

இதனை கணக்கில் கொண்டு, வரும் தேர்தலில் யாரை பிரதமராக தேர்வு செய்யவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மோடி அரசுதான் மீண்டும் வரப்போகிறது என மக்கள் நினைத்துவிட்டனர். இங்கு திரண்டிருக்கும் மக்களே அதற்கு சாட்சி.

இரண்டாவது முறை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.