‘பொண்டாட்டிங்க மண் பாண்டம் மாதிரி… ‘சவுகிதார் எஸ்.வி.சேகரின் ‘சர்ச்சை’ டிவிட்…..


சென்னை:

பொண்டாட்டிங்க மண் பாண்டம் மாதிரி ஆரம்பத்துலையே நமக்கு வேணுங்கரமாதிரி மாத்திட னும் என்று எஸ்.வி.சேகர் டிவிட் பதிவிட்டுள்ளார். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜக கட்சியை சேர்ந்த சவுகிதார் எஸ்.வி.சேகர், அவ்வப்போது பெண்கள் குறித்து ஏதாவது பேசி, தன்னை பிரபலப்படுத்திக்கொள்வார்.

ஏற்கனவே மீடியா பெண்கள் குறித்து எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சில காலம் தலைமறைவாக ஓடி ஒளிந்தார்.

இந்த நிலையில், தற்போது  வித்தியாசமான டிவிட்களை பதிவிட்டு உள்ளார். அதில்,

பொண்டாட்டிங்க மண் பாண்டம் மாதிரி ஆரம்பத்துலையே நமக்கு வேணுங்கர மாதிரி மாத்திடனும், இல்லாட்டி செட் ஆயிடிச்சின்ணா அப்பறம் ஒன்னும் பண்ண முடியாது…!

புருஷன் என்பது காங்கிரீட் சிமெண்ட் மாதிரி… கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது. நல்லா ‘செட்டாக’ விட்டுட்டு அப்பறமா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.. ஒண்ணும் ஆகாது…! 

எஸ்வி சேகரின் இந்த டிவிட்கள்  குறித்து சமூக வலைதளங்களில் வலைதளவாசிகள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஏற்கனவே பெண்களுக்கு எதிரான அவரது கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, பெண்கள் குறித்து அவர் பதிவிட்டுள்ளதற்கு பல பெண்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

பெண்கள் என்ன போகப்பொருளா… என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.