மலையாள படம் ‘சோழா’, தமிழில் ‘அல்லி’ என்னும் பெயரில் வெளியாகிறது….!

--

மலையாளத்தில் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டு வரும் ‘சோழா’, தமிழில் ‘அல்லி’ என்னும் பெயரில் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தமிழில் ‘அல்லி’ என்னும் பெயரில் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளது. இதே போல் வெளிமொழி படங்களைத் தமிழில் சுயாதீன திரைப்படங்களாக வெளியிட ‘ஸ்டோன் பென்ச் இண்டி’ என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த நிறுவனம் மூலம் வெளியிடப்படும் முதல் படம் ‘அல்லி’ . டிசம்பரில் ‘அல்லி’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.