யஸ்வேந்திர சஹலால் எரிச்சலடைந்த கிறிஸ் கெய்ல் – ஏன்?

கிங்ஸ்டவுன்: யஸ்வேந்திர சஹலின் சமூக வலைதள செயல்பாடுகள் எரிச்சலூட்டும் வகையில் உள்ளதால், அவர் அதிலிருந்து வெளியேற வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெய்ல்.

இந்த வீரர்கள் இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள்.
கொரோனா முடக்கத்தால், உலகளவில், கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டு வீரர்களுமே முடங்கியுள்ளனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யஸ்வேந்திர சஹல், சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

இதை, ரசிகர்கள் உட்பட, பல கிரிக்கெட் வீரர்களும் கவனித்து வருகின்றன. இந்நிலையில்தான், சஹலின் சமூகவலைதள செயல்பாடுகள் குறித்து கெய்லின் கருத்து வெளிவந்துள்ளது.

“டிக் டாக் நிறுவனத்திடம் உங்களை பிளாக் செய்யும்படி நான் சொல்லப்போகிறேன். சமூகவலைதளத்தில் நீங்கள் மிகவும் எரிச்சலூட்டுகிறீர்கள். எனவே, இப்போது அதிலிருந்து நீங்கள் வெளியே வேண்டியுள்ளது.

நாங்கள் உங்களால் மிகவும் சோர்ந்துவிட்டோம். என் வாழ்வில், உங்களை மீண்டும் காண விரும்பவில்லை. நான் உங்களை பிளாக் செய்யப் போகிறேன்” என்றுள்ளார் கெய்ல்.