இந்தியத் தொடரில் ப‍ங்கேற்காத கிறிஸ் கெயில்!

மும்பை: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரிலிருந்து விலகியுள்ளார் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில்.

அவர், சமீபகாலங்களாக சரியான ஃபார்ம் இல்லாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 தொடர்களில் பங்கேற்பதற்காக வந்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. முதல் டி-20 போட்டி டிசம்பர் 6ம் தேதி ஐதராபாத்தில் துவங்குகிறது.

மேலும், முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 15ம் தேதி சென்னையில் துவங்குகிறது. ஆனால், இப்போட்டிகளில் அதிரடி மன்னன் கெயில் இடம்பெறாதது ரசிகர்கள் பலரை கவலைகொள்ளச் செய்துள்ளது.

“எங்களது அணியின் தேர்வுக்குழு, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் என்னை விளையாட வலியுறுத்தினாலும், எனக்கு அதில் பங்க‍ேற்க விருப்பமில்லை. மேலும், டி-20 தொடரிலும் பங்கேற்கப் போவதில்லை. வங்கதேச தொடரிலும் பங்கேற்பது சந்தேகமே. கிரிக்கெட்டிலிருந்து விலகி சில நாட்கள் ஓய்வில் இருக்கலாமென முடிவு செய்துள்ளேன்ன்” என்றார் கிறிஸ் கெயில்.

You may have missed