கெய்ல் புதிய சாதனை : ட்விட்டரில் வாழ்த்தியுள்ள வில்லாதி வில்லன் விஜய் மல்லையா!

 

 

Chris Gayle reaches 10, 000 T20 runs: Vijay Mallya congratulates Universe Boss on historic feat

 

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி மன்னனாக வலம் வரும் கிறிஸ்கெய்ல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக ஆடி வரும் கிறிஸ் கெயில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

கெய்லுக்கு அடுத்தப்படியாக மெக்கல்லம் 7524 ரன்களுடன் 2-வது இடத்திலும், பிரட் ஹோட்ஜ்க் 7338 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

 

கெய்ல் நிகழ்த்தியுள்ள இந்த புதிய சாதனைக்கு, பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா ட்விட்டரில் தமது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். கைது, ஜாமீன் என இத்தனை பரபரப்புக்கிடையிலும் கெய்லுக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பதன் மூலம், ஜாலி மூடை தாம் முற்றிலும் இழந்து விடவில்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் வித்தியாசமான தொழிலதிபர் மல்லையா!

 

 

Leave a Reply

Your email address will not be published.