சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் – தரவரிசையில் 7வது இடத்திற்கு முன்னேறிய கிறிஸ் வோக்ஸ்!

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவர் மொத்தம் 273 புள்ளிகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட்டில், மொத்தமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இரண்டாம் இன்னிங்ஸில் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து 84 ரன்களை அடித்தார். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில், 464 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்திலும், விண்டீஸ் அணியின் ஹோல்டர் 447 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 397 புள்ளிகளுடன் ஜடேஜா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி