வெலிங்டன்:

நியூசிலாந்தில் மசூதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.


கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தின் கிறிஸ்த்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது ஆஸ்திரேலிய தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் குழந்தைகள் உட்பட 49 பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் 2 பேர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

ஒருவர் ஃபர்ஹாஜ் ஆஹ்சன் என்றும் மற்றொருவர் முகமது இம்ரான் கான் என்றும் தெரியவந்துள்ளது.
ஃபர்ஹாஜ் ஆஹ்சன் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். முகமது இம்ரான் கான் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவர், நியூசிலாந்து பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

ஆஹ்சனுக்கு மனைவியும், 3 வயது மகளும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். ஆஹ்சன் கடந்த 2010-ம் ஆண்டு தான் நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஆன்ஸி என்ற 25 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

இவரது கணவருக்கு காலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது. கேரள மாநிலம் கொடங்களூரைச் சேர்ந்த இவர்கள், கடந்த ஒராண்டுக்கு முன்புதான் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். நியூசிலாந்து விவசாய பல்கலைக் கழகத்தில் ஆன்ஸி எம்டெக் படித்து வந்தார்.

இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.