கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதி மன்றம், கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளது.

கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மீது  34 மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் ஒருவர்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கிறிஸ்தவ மிஷனரிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று கூறிய நீதிபதிகள்,  கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால்…  அது மில்லியன் டாலர் கேள்வி  என்றும் கருத்து தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிரடி கேள்வி கிறிஸ்தவ மிஷனரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.