மிலன்: தேசிய மற்றும் கிளப் அணிகளுக்காக, உலகளவில் அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை எட்டினார் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதன்மூலம், அவர் பிரேசில் முன்னாள் வீரர் பீலேவின் நீண்டநாள் சாதனையை தகர்த்தார்.

தற்போது 35 வயதாகும் கிறிஸ்டியானோ, இத்தாலியின் யுவன்ட்ஸ் கிளப் அணியில் ஆடி வருகிறார்.

தனது தேசிய அணியான போர்ச்சுகல் அணிக்காக, 120 போட்டிகளில் பங்கேற்று 102 கோல்களை அடித்துள்ளார். கிளப் அணிகளைப் பொறுத்தவரை, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மேட்ரிட், லிஸ்பன் மற்றும் யுவன்ட்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக ஆடி மொத்தம் 656 கோல்களை உதைத்துள்ளார்.

இவரின் மொத்தக் கணக்கு 758 என்பதாக கூடியுள்ளது. இதன்மூலம், பிரேசிலின் பீலே வ‍ைத்திருந்த 742 கோல்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார் பீலே.

இந்தப் பட்டியலில், செக் குடியரசின் ஜோஸப் பிகான் 759 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.