சர்வதேச கால்பந்தில் 100 கோல்கள் – ரொனால்டோவின் சாதனை!

ஸ்டாக்ஹோம்: சர்வதேச கால்பந்து அரங்கில், 100 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரரானார் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோ.

தற்போது, ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஒரு போட்டியில் ஸ்வீடனை எதிர்கொண்டது எதிர்கொண்டது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி.

அப்போட்டியில், முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதியில், தலா 1 கோல் என, மொத்தம் 2 கோல்களை அடித்து, தன் அணியின் வெற்றிக்கு உதவினார். போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அவர் 2 கோல்களை அடித்ததன் மூலம், சர்வதேச கால்பந்து அரங்கில், மொத்தமாக 101 கோல்கள் அடித்து, ஐரோப்பாவில் முதல் நபராகவும், உலகளவில் இரண்டாவது நபராகவும் மாறியுள்ளார்.

முதலிடத்தில், 109 கோல்கள் அடித்த ஈரானின் அலி தயே உள்ளார். மூன்றாவது இடத்தில் 86 கோல்கள் அடித்து, மலேசியாவின் தகாரி உள்ளார்.