லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஸ்டார் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் மிக விலையுயர்ந்த காரான புகாட்டி ரக கா‍ர் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.75 கோடிகள்!

இவருக்கு தற்போது 35 வயதாகிறது. தற்போது, இத்தாலியின் யுவன்ட்ஸ் கிளப் அணிக்காக விளையாடுகிறார். இந்த அணி சமீபத்தில் ‘சீரி ஏ’ கோப்பை வென்றது.

இந்த கார்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுபவையாகும். புறப்பட்ட விநாடியில் சுமார் 60 கி.மீ. வேகத்தை எட்டும் இது, அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லும்.

அடுத்தாண்டு இந்த கார் ரொனால்டோவிடம் இருக்கும். இதையும் சேர்த்தால், அவரிடம் இருக்கும் மொத்த கார்களின் மதிப்பு ரூ.264 கோடிகள் ஆகும்.