கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

லிஸ்பன்: உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 35 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகளவில் முக்கிய கால்பந்து வீரர்களில் ஒருவராவார். இவருக்கு, அறிகுறிகள் எதுவுமின்றி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட இவர், தான் பங்கேற்கவிருந்த சில கிளப் போட்டிகளில் ஆடவில்லை. இதனையடுத்து, இவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், நெடிகவ் என்று முடிவு வந்ததையடுத்து போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ளார் ரொனால்டோ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.