கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று!

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அந்நாட்டு கால்பந்து சங்கம்.

இவர் மொத்தம் 5 முறை உலகின் சிறந்த வீரராக வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக பங்கேற்றார் ரொனால்டோ. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

ஆனால், தற்போது தொற்று உறுதிசெய்யப்பட்டதால், ஸ்வீடனுடனான போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர், முன்பு, தான் நடத்திவந்த ஹோட்டலையே, கொரோனா மருத்துவமனையாக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.