கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழக ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

சென்னை:

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கிறிஸ்தவ பெருமக்களுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் தங்களது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால்

“கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி, சந்தோசம், செழிப்பு ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

“இயேசுபிரான் போதித்த அன்பு வழியை அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்” என்று தெரிவித்து உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

அன்பும் அமைதியும் மிக்க வாழ்க்கை அனைவருக்கும் வாய்த்திட, கிறிஸ்தவ மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்  என்று வாழ்த்தியுள்ளார்.