வெளியானது கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’ பட ட்ரெய்லர்….!

உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கத்தில் வெளியான மொமெண்டோ, இன்ஷெப்சன், இண்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பல படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.டெனட் படம் ஜூலை 17-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.