‘டன்கிரீக்’ படத்தைத் தொடர்ந்து நோலன் அவரது அடுத்த படமான ‘டெனெட்’ படத்திற்கான படப்பிடிப்பு பணிகளுக்காக இந்தியா வந்துள்ளார்.

அவருடன் ‘டிவைலைட்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் ராபர்ட் பாட்டின்சனும் உடன் வந்திருந்தார்.

ஓர் ஆக்ஷன் படமாகத் தயாராகிவரும் ‘டெனெட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 10 நாட்கள் மும்பையில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தப் படம் ஏழு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் 2020 ஜூலை 17 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதுதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.