ஸ்ரீநகர்

ம்பது வருடங்களுக்கு முன்பு உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தேவாலய மணி மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநாகரில் உள்ளது ஜோலி ஃபேமிலி கத்தோலிக்க தேவாலயம்.  சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேவாலயம் கட்டப்பட்டது.    கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு கலவரத்தின் போது ஒரு குண்டு வெடிப்பு தாக்குதலில் இந்த தேவாலயத்தின் மணி சேதம் அடைந்தது.    அதற்கு முன்பு வரை கம்பீரமாக ஒலித்து வந்த மணி ஓசை அன்றுடன் நின்று போனது.

உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்த அந்த மணி கடந்த 50 ஆண்டுகளாக மீண்டும் பொருத்தப்படவில்லை.    அங்குள்ள 30 கிறுத்துவ குடும்பங்களால் பணம் செலவழிக்க முடியாததால் இந்தப் பணி நடைபெறவில்லை.  தற்போது சிறிது சிறிதாக பணம் சேகரித்து புதியதாக ஒரு மணி செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அங்குள்ள இந்துக்களும், இஸ்லாமியர்களும் பண உதவி செய்துள்ளனர்.

சுமார் 105 கிலோ எடையில் செய்யப்பட்ட மணி தற்போது பொருத்தப்படுள்ளது.   ஞாயிற்றுக் கிழமை கிறித்துவர்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்திப்பது வழக்கமான ஒன்று.   அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதிய மணி தனது கம்பீர மணி ஓசையை தொடங்கி உள்ளது.