கடந்த 2 வருடங்களாக பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது

தராபாத்

ந்திர மாநில கிராமம் ஒன்றில் அதே ஊரை சேர்ந்த பாதிரியார் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக பெண்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

இணையதளத்தில் பெண்களுக்காக மீ டூ என ஒரு ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.  அதில் உலகெங்கும் உள்ள பல பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றிய புகார்களை வெளியிட்டு வருகின்றனர்.   அதில் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளனர்.

அதில் ஒன்றாக ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜகனாதபுரம் கிராமத்தில் ஒரு பாதிரியாரின் பாலியல் கொடுமை பற்றி பகிர்ந்துள்ளனர்.  அந்தப் பாதிரியாரின் பெயர் டிட்டி எபினேசர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.  அவர்  அந்தக் கிராமத்தில் பல பெண்களை கடந்த 2015லிருந்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

அதையொட்டி ஆந்திர பெண்கள் ஆணையத்தின் தலைவர் ராஜகுமாரி அந்த கிராமத்துக்கு சென்று புகார் தந்த பெண்களை நேரில் சந்தித்தார்.   அப்போது அந்தப் பெண்கள் ராஜகுமாரியிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி உள்ளனர்.  ஒரு பெண், “தனக்கு கால் வசிப்பதால் மசாஜ் செய்ய வேண்டும் என காலை அழுத்தச் சொல்வார்.  பின்பு மேலே அழுத்த சொல்லி மிகவும் அசிங்கமாக நடந்துக் கொள்வார்.  தனக்கு உடன்படாத பெண்களுக்கு தனது மந்திரத்தின் மூலம் தீமை செய்வதாக மிரட்டுவார்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெண், “பெண்களை சிறப்பு பிரார்தனை எனக் கூறி நிர்வாணமாக மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கச் சொல்லி பார்த்து ரசிப்பார்.  அது மட்டும் இன்றி வெளியே சொல்ல இயலாத வகையில் அந்த சிறப்பு பிரார்த்தனை நடக்கும்.    இன்னும் 4 பெண்கள் அவரது பிடியில் உள்ளனர்.” என கூறி உள்ளார்.

இந்த புகார்களை அடுத்து கோதாவரி போலீஸ் சுப்பிரண்ட் பாதிரியாரை கைது செய்து அவருடன் இருந்த 4 இளம்பெண்களை மீட்டுள்ளனர்.   விசாரணையின் போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது வெளி வந்துள்ளது.