மத்தியஅமைச்சர்கள் மீதான ஊழல் – கருப்பு பணம்: தகவல் ஆணைய கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுப்பு

டில்லி:

த்தியஅமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்த தகவல்களை தெரிவிக்கும்படியும், கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவிக்கும்படியும்   மத்திய தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்கு  பதிலளிக்க பிரதமர் அலுவலகம்  மறுப்பு தெரிவித்து விட்டது.

மத்தியில் மோடி தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி பொறுப்பேற்ற  2014- ம் ஆண்டு முதல் 2017- ம் ஆண்டு வரை மத்திய அமைச்சர்களாக பணியாற்றியவர்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகார் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு  பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அதை தெரிவிக்க பிரதமர் அலவலகம் மறுத்து விட்டது.

மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த சஞ்சிவ் சதுர்வேதி என்பவர் தகவல் ஆணையத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்தும்,  ஐ.எஃப்.எஸ் அதிகாரி சஞ்சிவ் சதுர்வேதி  என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து தகவல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்து இருந்தார். அந்த கேள்விகளை சுட்டிகாட்டிய தலைமை தகவல் ஆணையர் ராதா கிருஷ்ண மாதூர் பிரதமர் அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு எவ்வளவு

கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் 

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு மக்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என கேள்வி எழுப்பி இருந்தார்.

இநத் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.