ரகுராம் ராஜனின் பட்டியலை வெளியிட பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையர் உத்தரவு

டில்லி

குராம் ராஜன் அளித்த வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதோர் பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும் என தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாதவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் மீது வங்கிகள் வழக்கு நடவடிக்கை எடுத்த பின்னரே இது குறித்த விவரங்கள் வெளி வருகின்றன. எற்கனவே இது போல் கடனை திருப்பி செலுத்தாதோர் குறித்த பட்டியலை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளார்

பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த பட்டியலை இதுவரை பிரதமர் அலுவலகம் வெளியிடாமல் உள்ளது.

இதை ஒட்டி மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யுலு, “பெரிய தொகைகளை கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை ஏற்கனவே முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அதை பிரதமர் அலுவலகம் வெளியிடாமல் உள்ளது.

அந்த பட்டியலை வெளியிட ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அது குறித்து தகவல் ஆணையத்துக்கு விவரம் அனுப்பி முன் அனுமதி பெற வேண்டும். அதை விடுத்து பட்டியலை தராமல் இருப்பது தவறு.

ரிசர்வ் வங்கி முன்னாள் இயக்குனர் ரகுராம் ராஜன் தாம் அளித்த  பட்டியலை இவ்வாறு காரணமின்றி வெளியிடாதது சட்ட விரோதம் என தெரிவித்துள்ளார். எனவே அதை ஆதராமாகக் கொண்டு உடனடியாக இந்த பட்டியலை வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.