திரைப்பட மற்றும் டிவி சீரியல் புகழ் நடிகை மைனா நந்தினிக்கு வளைகாப்பு..

டிவி சீரியல்களில் கிராமத்து பெண்ணா கவும் குடும்பப்பாங்கான பெண்ணாகவும் நடித்து கவர்ந்தவர் மைனா நந்தினி.  வம்சம் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானவர். அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி படங் களிலும் நடித்தார். சினிமா புகழ் என்பதால் இவருக்கு டிவி சீரியல்களில் நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ் பெற் றார். மேலும் பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண் மனைக்கிளி, டார்லிங் டார்லிங் என வரிசையாக சீரியல்களில் நடித்தார்.


நந்தினியின் முதல் திருமணம் பிரச்னை யில் சிக்கியது. பின்னர் சீரியல் நடிகர் யோகேஷை காதலித்து மறுமணம் செய்தார். தற்போது மைனா நந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். வீட்லேயே அவருக்கு வளைகாப்பு நடத்தது.
’குட்டி யோகேஷ் அல்லது குட்டி மைனாவிற்காக ஆவலோடு காத்திருப்பதாக தனது இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நந்தினி.