பாஜக மத்திய அமைச்சர் பொன்.ரா.,வுடன்  இயக்குனர் சேரன் திடீர் சந்திப்பு

திரைப்பட இயக்குநர் சேரன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தரமான படங்களை எடுத்து தேசிய விருதும் பெற்றவர் இயக்குனர் சேரன்.  புதிய முயற்சியாக , புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும்படியாக சி டூ ஹெச் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி தமிழகம் முழுதும் பலர் ஏஜென்சி எடுத்தார்கள்.  ஆனால்  சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக துவக்கவிழா நடத்தினார் சேரன். இந்த சி டூ ஹெச் நிறுவனம் மூலம்  “ஜெகே எனும் நண்பனின் வாழ்க்கை “ என்ற படம் மட்டும் வெளியிடப்பட்டது.

எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால், இந்த முயற்சியை சேரன் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரிடம் பணம் கட்டிய முகவர்கள் பலர்,  சேரன் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கை சந்தித்து வரும் சேரன், திடீரென மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சேரன்,  “கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக சேரன் கூறியுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Cheran, cinebits, cinema, director, meet, minister, pon radhakrishnan, அமைச்சர், இயக்குனர், சந்திப்பு, சினிபிட்ஸ், சினிமா, சேரன், பா.ஜ.க, பொன். ராதாகிருஷ்ணன்
-=-