திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் திடீர் திருமணம்

“குக்கூ’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜூ முருகன். சமீபத்தில் வெளியான இவரது ‘ஜோக்கர்’ திரைப்படம் பரவலான பாராட்டை பெற்றுள்ளது.

14264843_1109396279097252_7755203968569678037_n

இந்த நிலையில் தனது நீண்டநாள் தோழியான ஹேமா சின்ஹாவை, இன்று காலை சென்னை பெசண்ட் நகர் முருகனஅ கோயிலில் ராஜூ முருகன் திருமணம் செய்துகொண்டார்.

திரைப்பட இயக்குநர் பாலாவின் தலைமையில் நடந்த இந்தத் திருமணத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் வந்து வாழ்த்தினார். ராஜூ முருகன் மற்றும் ஹேமா சின்ஹாவின் நெருங்கிய நண்பர்கள்,  இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.