போதைப் பொருள் தடுப்புப்பிரிவு விசாரணையில் ரியா சக்ரவர்த்தி வெளியிட்ட 25 பிரபலங்களின் பெயர்கள்…..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளும் இந்த வழக்கில் சிபிஐயுடன் சேர்ந்து கைது செய்துள்ள நடிகை ரியா சக்ரபர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இந்த விசாரணையின் போது இந்தியா முழுக்க உள்ள 25 பிரபலங்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக பட்டியல் ஒன்றை ரியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட 25 பிரபலங்களின் பெயர்களை நடிகை ரியா சக்ரபர்த்தி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.