திரைத்துறை மீண்டும் உயிர் பெற்று பழைய நிலைக்கு திரும்ப இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என திரைத் துறை வல்லுநர்கள் கணிப்பு….!

ஊரடங்கு உத்தரவால் முடங்கி இருக்கும் தொழில்களில் சினிமா வர்த்தகமும் பிரதான இடத்தைப் பிடிக்கிறது.

இனி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வழக்கம் போல் ரசிகர்கள் கூட்டம் படையெடுக்குமா என்பது சந்தேகம் தான் .

ஒருமாதமாக பூட்டிக் கிடக்கும் திரையரங்குகளில் எலிகள் ஊருடுவி இருக்கைகள், கேபிள்களை நாசம் செய்ததால் கூடுதல் இழப்பை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

திரையரங்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடங்கி மின்கட்டணம் வரை அனைத்து செலவுகளையும் எந்த ஒரு வருமானமும் இன்றி செய்யும் சூழலுக்கு திரையரங்க உரிமையாளர்கள் ஆளாகி உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெற்றாலும் திரைத்துறை மீண்டும் உயிர் பெற்று பழைய நிலைக்கு திரும்ப இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என திரைத் துறை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.