பலகோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள்! வீடியோவில் படம் பார்க்கிறார்கள்!! அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சி N.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யனார் வீதி  படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு வெளியிட ஆர்.கே.சுரேஷ்  பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் நடிகர்கள் பாக்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர்  தேனப்பன்,  பாடகர் வேல்முருகன், ஜெய் ஆகாஷ், நீதியரசர் M V முரளிதரன் , பாடலாசிரியர் பிரியன்,இசையமைப்பாளர் யு.கே.முரளி உட்பட பலர் கலந்து கொண்டு  வாழ்த்தினார்கள். விழாவுக்கு வந்தவர்களை கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமிய கலைஞர்களை கொண்டு தாரை தப்பட்டை இசைத்து வரவேற்றார்கள்.

நீதியரசர் முரளிதரன் பேசும்போது: ஒரு படத்தை தயாரிப்பது அத்தனை சுலபமல்ல. அதை மிகுந்த சிரமப்பட்டே தயாரிக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகம் வந்து விட்டது. பல கோடிகள் போட்டு படம் தயாரிக்கிறார்கள். ஆனால்  வெகு சுலபமாக வீடியோவிலும், கேசட்டிலும் போட்டு படத்தை பார்த்து விடுகிறார்கள். இதுபோன்ற செயல்களை த டுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிற தாணு அவர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். இதன்  சிரமங்கள் குறித்து அவருக்கு தெரியும். பல படங்களை தயாரித்தவர். இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு  வரும்போது எங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அதை தடைசெய்கிற நடவடிக்கைகளை நாங்கள்  செய்திருக்கிறோம். இருந்தும் எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. இந்த விழாவுக்கு வரும்போதே  மழை குறுக்கிட்டது. அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். பொதுவாக சகுனம் பார்ப்பார்கள். மழை குறுக்கிட்டதால் அய்யனார்வீதி படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும் போது..

இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு கிராமத்துக்கு வருவது போல் இருக்கிறது. ஆட்டம் பாட்டம் புரவி புறபாடு என அய்யனார் விழா அமர்க்களப்படுகிறது. பொதுவாக அய்யனார் புரவி விழா எடுத்த அடுத்த சிலநாட்களில் தான் மழை வரும். இங்கே இந்த விழா நடப்பதற்கு முன்னரே மழை வந்தது நல்ல சகுனம் தான். நாட்டு புறக்கலையை இயக்குனர் ஊக்குவித்துள்ளார்.

யு.கே.முரளி கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டிருந்தாலும் நேட்டிவிட்டியாக இசையமைத்துள்ளார். கல்லூரி, கள்ளச்சாராயம் இரண்டு பாடல்களுமே நல்லாயிருக்கு. கள்ளச்சாரயம் போதை தெளிய கொஞ்சம் நேரம் ஆகும் போல என சிரித்து கொண்டே தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டவர், பிரியனின் வரிகளில் வேல்முருகன் குரலில் பாடல் ரொம்ம நல்லாவே இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். தயாரிப்பாளர் அடுதடுத்து படங்கள் எடுக்க வாழத்துக்கள். என்றார்.

தயாரிப்பாளர் தாணு பேசும்போது: அய்யனார் வீதி படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஆயிரக்கணக்கான  மேடைகளில் இசை பரப்பிய யுகே முரளியின் இசையில் பாடல்கள் அருமையாக இருக்கிறது. பாக்யராஜ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மிகசிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார். தம்பி பொன்வண்ணன் அய்யனாராக வலம் வ ந்தது மிக அற்புதமாக இருந்தது. இந்த படம் எல்லா இடங்களிலும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது: இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமாரை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும்.  நடிகராக இருந்திருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்களோடு களத்தில் இறங்கி செயல்படுவார். திடீர்னு ஒருநாள்  அண்ணே அய்யனார் படம் பன்றேன். நீங்களும், பாக்யராஜ் சாரும் பண்ணி கொடுக்கணும்னு சொன்னதும், நான்  கேட்டேன் ‘சார் இதுக்கு சம்மதம் சொல்லிட்டாரா’ன்னு கேட்டேன். இல்ல இவன் ஆர்வத்துல சொல்றானான்னு… இது க்கு காரணம், பாக்யராஜ் சார் அவர் இயக்கும் படத்துலயே ஸ்பாட்ல அவ்ளோ சீக்கிரம் திருப்தி அடையமாட்டார். எ டுத்த காட்சிகளை போட்டு பார்த்து விவாதித்து முடிவு செய்வார். இதுவேற சின்ன கம்பெனி படம். எடுக்கும்போது ஏதாவது கருத்து சொல்லி அது விவாதமாகிப்போனா இவன் தாங்குனானா… இல்ல நான் நண்பனாச்சேன்னு நடிக்கும் போது ஏதாவது சொல்லி அது வேற ஏதாவது தாமதமாகிப்போனா இவனால தாங்க முடியுமான்னு ஒரு சந்தேகம் இரு ந்தது. ஆனா,  உண்மையிலயே ராஜ்குமார் குடுத்து வைச்சவன்னு சொல்லணும். பாக்யராஜ் சார் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். சாரும், நானும் எங்களால் எவ்வளவு சிறப்பா இந்த படத்துக்கு செய்ய முடியுமோ  அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறோம்னு நம்புகிறேன். பாக்யராஜ் சாருக்கு நான் இந்த யூனிட் சார்பாக நன்றி  தெரிவித்து கொள்கிறேன்.

ஜெய் ஆகாஷ் பேசும்போது: நான் நடித்த ராமகிருஷ்ணா படத்தின் காட்சியின்போது பாக்யராஜ் சாரை பார்த்தேன்.  அது இன்றும் எனக்கு நினைவுக்கு இருக்கிறது. நீ தமிழ் பையன். நல்லா பண்ணுன்னு வாழ்த்தியது இன்னும் என்னால் மறக்க முடியாமல் இருக்கிறது. யுகே முரளி மிகச் சிறந்த இசையமைப்பாளர். என் படங்களிலும் அவர்தான்  இசையமைக்கிறார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார்: இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது கதை கொடுத்த நண்பன் பாஸ்கருக்கும், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி 18 வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த  அண்ணன் செந்தில்வேலுக்கும், விஜயசங்கருக்கும் இதற்காக உதவி செய்த எல்லாருக்கும் நன்றி. பொன்வண்ணன்  அண்ணன் எனக்கு இந்த படத்திற்காக தட்டி கொடுத்தார். அவருக்கு நன்றி. பாக்யராஜ் சார் இல்லாமல் பொன்ன்வண்ணன் அண்ணன் எதையும் செய்ய மாட்டார். இருவரும் பாரதிராஜா சாரிடம் இருந்து வந்தவர்கள். இந்த  படத்தின் டீசர் என் இதயதெய்வம் புரட்சித்தலைவர் ராமாவரம் தோட்டத்தில் வெளியிட்டோம். யுவன் மேடையில்  பெருசாக பேசமாட்டார். ஆனால் படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் பேசும்படி இருக்கும். பாக்யராஜ் சார் தான் இந்த படத்தை மிக சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். எனக்காக உழைத்த எல்லாருக்கும் நன்றி  தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது: நீதியரசர் என்றதுமே ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் நினைவு க்கு வந்தது. சில போஸ்டுக்கு சிலபேர் வந்து உட்கார்ந்ததுமே ஒரு தனித்தன்மைய குடுக்கும். நாங்கெல்லாம்  விளையாட்டா சொல்லிப்போம். போலீஸ்காரர் போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே கை துருதுருன்னு இருக்கும். யாராவது  கெடைப்பாங்களான்னு பாத்துகிட்டிருப்பாங்க. இதுக்குத்தான் புரட்சித்தலைவர் பாட்டுல சொல்லியிருக்கார் பதவி  வரும்போது பணிவு வரவேண்டும். துணிவு வரவேண்டும் என்று… அப்படி பதவி வரும்போது பணிவோடு, துணிவோடு  சிலர்தான் இருப்பார்கள். எங்கண்ணன் மோட்டார் சைக்கிள்ள போகும்போது 10 வயசு பையன் குறுக்க வந்து விபத்தாகிப்போச்சி. அதுல அந்த பையன் இறந்துபோயிட்டான். அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தப்போ நானும்போய் கோர்ட்ல  நின்னேன். பேர் சொல்லி கூப்பிட்டப்போ கூண்டுல போய் ஏறப்போனேன். என்னை பார்த்த நீதிபதி ‘நீ என்ன  பண்றேன்னு கேட்டார். நான் காலேஜ் படிக்கிற மாணவன்னு சொன்னேன்’ உடனே அவர் கூண்டுல ஏறவேணாம்  இப்படியே நின்னு பேசுன்னு’ சொல்லிட்டார். அதுதான். குற்றவாளின்னு சொன்னாங்கன்னா கூண்டுல வைச்சித்தான்  கேள்வி கேக்கணும். ஆனா அவர் கூண்டுல ஏத்துல என்னன்னா ஒரு கல்லூரி மாணவன் ரோட்ல ஆக்சிடென்ட்  ஆகிப்போச்சி இதுக்காக கூண்டுல நிறுத்தினா வாழ்நாள் முழுக்க கூண்டுல நின்னோமேன்னு ஒரு குற்றஉணர்வு வர க்கூடாது… இது ஆக்சிடென்ட் தான் தெரிஞ்சி பண்றதில்லைன்னுன்னு சொல்லி கூண்டுல ஏத்தாம விசாரிச்சார். அதை  அங்க இருந்தவங்க ஆச்சர்யமா பாத்து வக்கீல் எல்லாரும் கை தட்டினாங்க. இது அந்த ஜட்ஜ் உடைய அந்த அனு குமுறை.

சில சம்பவங்கள் அவர்களின் கேரக்டர்கள் மனசுல பசுமரத்தாணிபோல பதிஞ்சி போயிடும். எனக்கு இது  நடந்து கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேல ஆனாலும் இன்னும் நினைவில் இருக்கு. இந்த விழாவில் என் பக்கத்துல  நீதியரசர் வந்து உட்கார்ந்ததும் இந்த நினைவு வந்தது. இசையில் நான் ஆக்சிடென்ட்டா நுழைஞ்சி நான்பட்ட  அவஸ்தை இருக்கே… யுகே முரளி ரொம்ப வருஷமா போராடி வந்தார்னு சொன்னார்கள். நான் சொன்னேன் இந்த படம் வெளியானதும் பல படங்கள் வரும்னு சொன்னேன். ஆனா பேசும்போது ஆகாஷ் அவர் படங்களில் யுகே முரளிதான் இசை என்று சொன்னார்.

தொடர்ந்து இன்னும் பல படங்கள் வரும். நான் இசையமைப்பேன்னு யாருமே நம்பல. ஆனா, ஒரு படத்துக்கு புலமை பித்தன் வந்தார். ஹம் பண்ணதும் பேசாம இந்த பாட்டை நீயே பாடிடுன்னு சொன்னார். அதுக்கு அவர் சொன்ன காரணம், உனக்கு மியூசிக் போடவே தெரியாதுன்னு சொல்றாங்க. அதனால நீயே பாடிடுட்டு சொன்னார். அந்த பாட்டுதான் ‘பச்சமலை’ பாட்டு.  எனக்கு இசை நோட் எதுவும் தெரியாது. ஆனா, கத்துகிட்டிருக்கேன். கத்துக்கிறதுக்கு வயசு எதுவும் தேவையில்லை. எப்படியாவது இசை நோட் கத்துகிட்டு என் படத்துக்கு வாசிக்காம விடமாட்டேன். என்னிடம் யார் வந்து எதை சொன்னாலும் அதில் எனக்கு தோன்றிய கருத்துக்களை தயங்காமல் சொல்லிவிடுவேன்.

ஜிப்சி ராஜ்குமார் வந்து கதையை சொன்னதும் நடிக்கிறேன்னு சொன்னேன். என்கிட்ட கதையை சொல்லும்போது படம் 30 சதவீதம் எடுத்து முடிச்சிட்டோம்னு சொன்னாங்க. இளைஞர்களுக்கு இன்னும் நிறைய சீன் வையுங்கன்னு சொன்னேன். தயாரிப்பாளர் செந்தில் நடிச்சிருக்காருன்னு யோசிச்சேன். இப்ப பார்த்தா நல்லா டான்ஸ் ஆடியிருக்கார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் புரட்சித்தலைவர் பத்தி ஒரு பாடல் எழுதி இசையமைத்து இயக்குனர் பேரரசு ஒரு பாடலை வெளியிட்டிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். சினிமாவுக்கு காசு போட்டிருந்தாலும் பொன்வண்ணன் சொன்னதுபோல பல குடும்பங்களுக்கு பணம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த காசை திரும்ப எடுக்க வேண்டும். இது எதுவும் வீண் போகாமல் திரும்ப கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  இவ்வாறு இயக்குனர் பாக்யராஜ் பேசினார்.