திரைவிமர்சனம்: நோட்டா

மிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் முழு நீள அரசியல் திரைப்படம்.  அதுவும் அரசியலுக்கு வந்திருக்கும் வரப்போகும் நடிகர்களே நடிக்கத் தயங்கு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தெலுங்கு ஸ்டார் விஜய் தேவரகொண்டா.

வழக்கு ஒன்றில் கைதாகிவிடுவோம் என்று நினைக்கும் முதல்வர் நாசர்,  தனது மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்வர் ஆக்குகிறார். விட்டேத்தியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் விஜய் விருப்பமே இல்லாமல் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்கொள்கிறார். ஒருகட்டத்தில், முதல்வர் பதவி மூலம் என்னென்ன மக்கள் பணிகள் செய்ய முடியும் என்று பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனை வழங்க…  அதிரடியாக அரசியல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

இதனால் அவருக்கு ஏராளமான எதிர்ப்பு ஏற்பட… அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

விஜய் தேவரகொண்டா, கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வு. மிரட்டலான நடிப்பு. அதுவும் தமிழ் தெரியாத இந்த தெலுங்கு நடிகர், ஆர்வத்துடன் தமிழ் கற்று சிறப்பாக வசனம் பேசியிருப்பது பாராட்டுக்குரியது.

பேருந்து எரிக்கப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசும் காட்சி… விஜய்யின் சிறப்பான நடிப்புக்கு ஒரு உதாரணம்.

முதல்வராக நாசர்,   வழக்கம்போலவே தனது  பாத்திரம் அறிந்து இயல்பாக நடித்திருக்கிறார். வழக்கில் கைதாகிவிடுவோம் என்கிற நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சிந்திப்பது, மகனையே முதல்வராக்குவது என்று அதகளம்.

பத்திரிகையாளராக வரும் சத்யராஜ்… அதுவும் அரசியல் படம். சொல்லவும் வேண்டுமா?  ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் முகபாவம், உச்சரிப்பு.. அத்தனையும் அற்புதம்.

படத்தின் நாயகி என்று மெஹ்ரீன்.  படத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்கிறார். அதன்பின் அவருக்கு முக்கியத்தும் உள்ள காட்சிகள் இல்லை.  எதிர்க்கட்சித் தலைவரின் மகளாக வரும் சஞ்சனாதான் அதிக காட்சிகள் வருகிறார். தவிர இவரது கதாபாத்திரத்துக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். (“அந்த” பெண் அரசியல்வாதியின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.)

அரசியல்வாதிக்கு துணைக்கரமாக வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஒரு அரசியல்வாதியின் உதவியாளரை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

இசை.. சாம் சிஎஸ்.  படத்தில் இரு துள்ளல் பாடல்கள்தான். அவ்வளவாக ரசிக்கவைக்கவில்லை. ஆனால்  பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் மனிதர்.

கடந்தகால மற்றும் தற்போதைய அரசியலை நினைவுபடுத்தும் பல காட்சிகளை துணிச்சலுடன் வைத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்சங்கர்.

முதல்வரைப் பார்த்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பயந்து குனிந்து மரியாதை செய்வது, இடைத்தேர்தல், செம்பரம்பாக்க ஏரி திறப்பு சம்பவம், ஸ்டிக்கர் விவகாரம், ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் குடி கும்மாளம் என்று அதகளம் செய்வது, மருத்துவமனை காட்சி, அமர்க்களம் செய்வது, ஆஸ்பிட்டல் காட்சி என்று அதிரடியாக பல காட்சிகள் இருக்கின்றன.

முதல்வர் நாசருக்கும் பத்திரிகையாளர் சத்யராசூக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்து உடைத்திருப்பது ரசிக்கவைக்கிறது.

நோட்ட – வெற்றிபெறும் என்பதே கணிப்பு.

கார்ட்டூன் கேலரி