திரைவிமர்சனம்: திமிரு புடிச்சவன்

கன் குற்றம் செய்தால் அவனையும் தேர்க்காலில் நசுக்கும் மனுநீதி சோழன்போல, தப்பு செய்தது தன் தம்பியே ஆனாலும் “தகுந்த” தண்டனை வழங்கும் காவல்காரனின் கதை.

பள்ளியில் படிக்கும் தன் தம்பி மீது, கான்ஸ்டபிள் அண்ணன் விஜய் ஆண்டனிக்கு ரொம்பவே பாசம். ஆனால் தம்பியை காவல்துறை உயர் அதிகாரியாக்க வேண்டும் என்று பாசத்தை வெளிக்காட்டாமல், கண்டிப்பும் கட்டுப்பாடுமாய் வளர்க்கிறார். இந்த இரண்டும் பிடிக்காமல் தம்பி ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். வந்தவருக்கு சகவாச தோசம் சரியாக இல்லாமல் போகவே,  போக்கிரியாக உருவாகிறார்.

சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற விஜய் ஆண்டனி சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். அப்போது அவரது தம்பி, ஒருவரைக் கொலை செய்துவிட, தம்பியை என்கவுன்ட்டர் செய்துவிடுகிறார். பதவி உயர்வு கிடைக்கிறது.

ஆனால் மனதில் உறுத்தல்.  இளம் குற்றவாளிகள் உருவாக யார் காரணம் என்று ஆராய்கிறார். காரணம், தாதா தீனா என்பதை அறிகிறார். தாதா. தீனாவிடம் இருக்கும் ஏராளமான இளம் குற்றவாளிகளை மீட்க சபதம் எடுக்கிறார். அது நடந்ததா என்பதே கதை.

இன்ஸ்பெக்டர் வேடத்தில்கூட, முறுக்கு காட்டாமல் வழக்கமான தனது சோக  பாவனையையே வெளிப்படுத்துகிறார் விஜய் ஆண்டனி. இத்தனை படங்கள் நடித்த பிறகாகவது, நடிப்புப் பயிற்சிக்கு செல்லலாம் அவர். ஒரே மாதிரியான முகபாவனை, பேச்சு எரிச்சலூட்டுகிறது.

தவிர ஆக்சன் படம் என்பதை காட்டுவதற்காக இவர் அடியாட்களை தாக்க.. அவர்கள் நூறடி உயரத்துக்குப் பறந்து விழுவது.. ஓவர்.

 

இவருக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ்.  சப் இன்ஸ்பெக்டராக வரும் இவர், 20 ரூபாய் லஞ்சம் வாங்குகிறாராம். நடிப்பில் முறுக்கு (!) காட்டினாலும் ஏனோ மனதில் ஒட்டவில்லை.

 

பல படங்களில் அடியாட்களில் ஒருவராக வந்து போன, தீனா, இந்தப் படத்தில் தனி வில்லனாகி மனதிலேயே நின்றுவிடுகிறார். மிரட்டல் நடிப்பு.

திருநங்கை சப்இன்ஸ்பெக்டராக சிந்துஜா நடித்திருக்கிறார்.  மரியாதைக்குரிய பாத்திரப்படைப்பு. பாராட்டுக்கள்.

வில்லனின் அடிப்பொடிகளாக வந்து மிரட்டுகிறார்கள் ஜாக் ராபின், நிக்சன், சாய் ராகுல், கிச்சா ஆகியோர்.

இசை (யும்) விஜய் ஆண்டனி.  பின்னணி இசையில் ரசிக்கவைக்கிறார். வேலவா பாடல் ஓகே.

 

விஜய் ஆண்டனி தனது தம்பி மீது கண்டிப்பு காட்டுவெதல்லாம் ஓகேதான். ஆனால் அந்த காட்சிகளின் நீளத்தை குறைதிருக்கலாம்.  ,. வில்லன் தீனாவை சிறு சிறு குற்றங்களில் ஈடுபட தூண்டி,  சிக்க வைத்து, சிறைக்கு அனுப்பும் விஜய் ஆண்டனியின் திட்டங்கள் ரசக்க வைக்கின்றன. ஆனால் மொத்ததில் திமிரு புடிச்சவனை, “புடிச்சவன்” என்று சொல்ல முடியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published.