Random image

சினிமா விமர்சனம்: டிக் டிக் டிக்  

டத்தை இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படம் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் 1963 ஆம் ஆண்டு   எம்.ஜி.ஆர் நடிக்க ர் காசிலிங்கம் இயக்கிய கலையரசி தான் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படம் என்கிறார்கள் சினிமா ஆராய்ச்சியாளர்கள்.

போகட்டும் நாம் விமர்சனத்துக்கு வருவோம்.

விண்ணில் இருந்து சுமார் 80 மீட்டர் சுற்றளவு எரி கல் ஒன்று வட சென்னையில் விழுகிறது. அந்த கல் ஏற்படுத்திய பாதிப்பில் சில உயிர்கள் பலியாகி விடுகின்றன.

உடனே மத்திய, மாநில அரசுகள் அந்த எரி கல்லை பரிசோதனை செய்வதில் இறங்குகின்றன. அப்போது இந்தக் கல்லைவிட பன்மடங்கு பெரிய  எரி கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரியவருகிறது. 13 நாட்களில் பூமியைத் தாக்க இருக்கும் அந்த கல், தமிழகத்தையே அழித்துவிடும் என்பதையும் அறிகிறார்கள்.

இதையடுத்து ராணுவத்தில் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவில் இருக்கும் மேஜர் ஜெயப்பிரகாஷிடம், விண்கல்லை தடுக்கும் பணியை அளிக்கிறார்கள். அவர் தனது ராணுவ ஆராய்ச்சி மைய அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கிறார். எரி கல்லை பூமிக்கு மிக அருகில் வைத்து வெடிக்க வைக்கலாம் என தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அப்படி செய்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரிய வருகிறது. ஆகவே விண்வெளியிலேயே அந்த எரி கல்லை இரண்டாகப் பிளந்து வெடிக்கச் செய்தால்  அழிவிலிருந்து தப்பலாம் என முடிவெடுக்கிறார்கள்.

அப்படி கல்லை தாக்கி வெடித்து சிதற வைக்கும் ஆற்றல் உள்ள அணு ஆயுதம் உலகத்திலேயே இல்லை. அதே நேரம், விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் வேறொரு நாட்டின் விண்வெளி ஓடத்தில் அப்படியொரு ஆற்றல் வாய்ந்த அணு ஆயுத ஏவுகணை இருப்பது ஜெயப்பிரகாஷூக்கு தெரியவருகிறது. ஆகவே  அந்த அணு ஆயுத ஏவுகணையை கைப்பற்ற  ஜெயப்பிரகாஷ் தலைமையிலான ராணுவ அணியினர் முயற்சியில் இறங்குகிறார்கள்.

இந்த அஸைண்மெண்ட்டை செய்ய பொருத்தமானவர் என்று ஜெயம் ரவியை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் ஒரு மேஜிசியன். வழக்கு ஒன்றில் அப்பாவி ஒருவருக்கு உதவி செய்யப் போய் காவல்துறையி சிக்கி தற்போது சிறையில் இருக்கிறார் ரவி. ஆனால் இவர் பெரிதாக அதில் அக்கறைகாட்டவில்லை.

அவரது ஐந்து வயது மகனை காட்டியே ஜெயம் ரவியை ஒப்புக்கொள்ள வைக்கிறது ராணுவம். ஜெயம் ரவியும் பணியை ஏற்கிறார்.

இவர்களுக்கு  விண்வெளியில் இருப்பதற்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ப் பயிற்சியை முடித்துவிட்டு ஜெயம் ரவியும், அவரது நண்பர்களான ரமேஷ் திலக், அர்ஜூனன் ஆகியோரும் விண்வெளிக்கு செல்கிறார்கள்.

அந்த நேரத்தில் ஜெயம் ரவிக்கு வரும் தனிப்பட்ட அழைப்பில் பேசும் மர்மக் குரல் ஜெயம் ரவியின் மகன் தற்போது தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், விண்வெளியில் அந்த அணு ஆயுத ஏவுகணையைக் கைப்பற்றி தங்களிடம்  ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது மகனை கொலை செய்யப் போவதாகவும் சொல்கிறது அந்த மர்மக்குரல்.

இதனால் அதிர்ச்சியடையும் ஜெயம் ரவி.. மகனுக்காக அந்தக் குரல் சொல்லியபடியெல்லாம் விண்வெளியில் செயல்படுகிறார்.  இதனால் அங்கே ஏகப்பட்ட குழப்பங்கங்கள்.

இறுதியில்  என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை.

ஜெயம் ரவி எப்போதும் போலவே துறுதுறுப்பாக நடிக்கிறார். ஆனால் இயல்பாக நடிக்கவில்லை.  மகனை நினைத்து கண் கலங்கும் காட்சியில்கூட செயற்கைத்தனம்தான்.

ஜெயம்ரவியின் மகன் ஆரவ்தான், படத்திலும் மகனாக நடித்திருக்கிறார். துடிப்பாக நடித்திருக்கிறார் ஆரவ். ரசிக்கவைக்கிறார்.

இளம் ராணுவ அதிகாரியாக வரும் நிவேதா பெத்துராஜ், கதாபாத்திரத்துக்கு பொருந்தவே இல்லை. விதிவிலக்காக சில காட்சிகளில் இவர் “லைட்”டாக நடித்திருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல சிறப்பான நடிப்பு. ரித்திகா சீனிவாஸும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்.

மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்,  கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்திதான். தமிழ்ப்பட பட்டஜெட்டுக்குள் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளி ஓடம், எரி கல், அணு ஆயுதம் என்று சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

டி.இமானின் இசையில் பாடல்கள் எப்போதும்போல ஸ்டீரியோ டைப்பில் இருக்கின்றன. ஆனால் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக எரிகல் காண்பிக்கப்படும்போதும்,  விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்பான காட்சிகளிலும் இமானின் இசை அதிரவைக்கிறது.

எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதி சிறப்பு. விண்வெளி காட்சிகளில் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

படம் துவங்கியதில் இருந்தே ராக்கெட் வேகம்தான். சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்.

லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்.