17-ம் தேதிக்கு பிறகு சினிமா படபிடிப்புக்கு அனுமதி…..?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு கலந்து கொண்டு உணவுபொருள்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் சினிமா படபிடிப்புக்கு லைட் மேன் முதல் இயக்குநர் வரை நூறு முதல் 200 தொழிலாளர்கள் பணிபுரியம் சூழ்நிலை உள்ளது.

வரும் 17ந்தேதிக்கு பின்னர் சுய ஊரடங்கு எந்த நிலை வருகின்றதோ, அதற்கு ஏற்ப சினிமா படபிடிப்புக்கு அனுமதி கொடுப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் என கூறியுள்ளார் .