திரை அரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை.. மத்திய அரசு விளக்கம்..

கொரோனா ஊரடங்கால் வர்த்தக நிறுவனங்கள், சினிமா அரங்குகள் உள்ளிட்ட எல்லாமே மூடப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்வு கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் மற்றும் மால்கள் எல்லாம் திறக்கப் பட்டது. ஆனால் இதில் பாதிக்கப்பட்டு நிற்பது சினிமா தியேட்டர்கள்தான். இன்னும் திறக்கப்படவில்லை.


இந்நிலையில் தியேட்டர்களை திறக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப் பட்டன. இதுகுறித்து மத்திய அரசு தியேட்டர் அதிபர்களுடன ஆலோ சனை நடத்தி வருகிறது. இந்நிலையில் திரை அரங்குகள் அக்டோபர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என முடிவெடுக் கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லையாம்
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித் துள்ளது. அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.