கேரளாவில் ஜன.5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி: முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறி உள்ளதாவது: மாநிலத்தில் வரும் 5ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரங்குகளில் நடத்தப்படும் கூட்டங்களில் 100 பேர் வரையிலும் வெளியே நிகழ்ச்சிகளை நடத்தினால் 200 பேர் வரையிலும் கலந்து கொள்ளலாம்.

மேலும் திரையரங்குகளில் 50 சதவீதம் அளவிற்கு பார்வையாளர்களை அனுமதித்து கொள்ளலாம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.