நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை

ஜெயசுதா – நிதின் கபூர்

டிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை ஜெயசுதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்டங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர். பிறகு திரைப்படத்துறையைவிட்டு அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸில் பொறுப்புகளில் இருந்த இவர் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.

இதற்கிடையே,  இந்திப்பட தயாரிப்பாளர் நிதின் கபூரை கடந்த 1995ஆம் ஆண்டில்  மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள்  இருக்கிறார்கள்.

நிதின் கபூரை ”மேரா பட்டி சிர்ப்”, ”காஞ்சனா சீதா”, ”கலிகாலம்”, ”ஹேண்ட்ஸ் அப்” போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.  சமீபத்தில் தனது மகன் ஷ்ரேயனை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரித்தார். அது தோல்வியடைந்தது.

இதனால், நிதி நெருக்கடிக்கு ஆளான நிதின் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவரது இறுதிச் சடங்கு நாளை மும்பையில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட நிதின் கபூர், இந்தி நடிகர்  ஜிதேந்திராவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி