கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்….!

ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

தனது ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க, ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்க , கல் ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்கள்.

பிர்த்வி சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு இத்தாலி நாட்டை சேர்ந்த ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்கிறார்.

மர்மம் திகில் மற்றும் திரில்லர் ஜானர் படமாக உருவாகும் இப்படம் 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி