2017ம் ஆண்டே ‘ஆன்டிகுவா’ குடியுரிமை பெற்றுள்ள மெகுல் சோக்ஷி: குடியுரிமை முதலீட்டு பிரிவு தகவல்

மும்பை:

ந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற பிரபல வைர வியாபாரியான மெகுல்சோஷி ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,636 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர்.

மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. வங்கி மோசடி விவகாரத்தில் விசாரணையை விரிவுப்படுத்தி உள்ள சிபிஐ மோசடிக்கு சதிதிட்டம் தீட்டியதாக வங்கியின் ஆடிட்டர் மோகிந்தர் குமார் சர்மா கைது செய்தது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில்,  தொழிலதிபர் மெகுல் சோக்ஷி,  நடந்த ஆண்டு நவம்பர் மாதம்  ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியுரிமை பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

குடியுரிமை முதலீட்டு பிரிவு (Citizenship by Investment Unit (CIU) இதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,  : “2017 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மெஹூல் சோகிசி பதிவு செய்யப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச விசாரணைக்கு  உட்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் குடியுரிமை வழங்கப்பட்ட பின்னர், மெகுல் சோக்ஷி கடந்த  ஜனவரி 15ந்தேதி  அன்று அன்டிகுவாவில் தேசிய உறுதிமொழி ஏற்றிருப்பதாகவும்  சிஐயு தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 24ந்தேதி வெளியான பத்திரிகை செய்தியொன்றில்,  ‘மெகுல் சோக்ஸி ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல்  உள்ளூர் பாஸ்போர்ட்’  அதிகாரிகள் மற்றும், இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு ஆன்டிகுவா மற்றும் பார்பூடாவில் இருந்து அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.