தடையைமீறி போராட்டம்: வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா பெங்களூரில் கைது

பெங்களூரு:

காவல்துறையினரின் தடையைமீறி போராட்டம் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா பெங்களூரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பெங்களுருவில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்படசில அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் போராட்டம்  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.