டெல்லி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்த, அச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற இரு அவை களிலும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன.