உயிரே போனாலும் குடியுரிமை சட்டம் புதுவையில் அமல்படுத்த முடியாது! நாராயணசாமி

புதுச்சேரி:

யிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை புதுவையில் அமல்படுத்த விட மாட்டோம் என்று மாநில முதல்வர்  நாராயணசாமி கூறினார்.

புதுவையில்  இஸ்லாமிய அமைப்பான  ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உயிரே போனாலும் புதுவையில் குடியுரிமை சட்டத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று இஸ்லாமிய அமைப்புகள் புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட மாநில முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலத்தில்  புதுவையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த விடமாட்டேன்.எனது உயிரே போனாலும் அது நடக்காது என்றவர், எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று ஆவேசமாக கூறினார். எங்களது அரசு  என்றும் சிறுபான்மை மக்களுக்கு புதுவை காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசு உறுதுணையாக இருக்கும் .