ஷிலாங்:

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவோம் என  கூட்டணி கட்சியான  அசாம் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான  கொனார்டு சங்மா எச்சரித்துள்ள நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான மிசோரம் மாநில முதல்வர் ஷோரம்தங்காவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவகக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  மிசோரம், அருணாசல பிரதேசம், நாகலாந்து மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மிசோர மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநில கட்சியான எம்என்ப் 26 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக  கூட்டணி கட்சியான,   அமல்படுத்த நினைக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மாநில முதல்வர் ஷொரம்தங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மிசோ தேசிய முன்னணி  (Mizo National Front (MNF)) கட்சித் தலைவரும் மாநில முதல்வரு மான ஷொரம்தங்கா பாஜகவின் அணுகுமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், இது அமல்படுத்தப்பட்டால் வடகிழக்கு மாநிலங்கள்  மோசமாக பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அதுபோல மிசோரம் மாநில இளைஞர் அமைப்பு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.

என்ன சொல்கிறது… குடியுரிமை சட்ட திருத்த மசோதா:

நமது அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற  நாடு களில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லீம் அல்லாத பிற மதத்தினரான இந்துக்கள், சீக்கி யர்கள், புத்த மதத்தினர்,  ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்த வர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில்,  குடியுரிமைச்சட்டம் 1955- ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கடந்த  2016-ம் ஆண்டு குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.  இந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல மாநிங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே 1971 -ம் ஆண்டுக்கு பிறகு சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என 1985 -அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதை செயலற்றதாக்கும் வகையில், மத்திய அரசின் குடியுரிமைச்சட்ட திருத்த மசோதா அமையும் என்று  கூறி‘ பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன காரணமாக அசாமில் பாஜக கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி  உள்ளன. அசாம் மாநில முதல்வரும் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது மிசோரம் மாநில முதல்வரும் பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடை பெற்று வருகிறத.